உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை அதிக பாதுகாப்பகவும்
பத்திரமானதாகவும் செய்கிறது
- கணக்கு நடவடிக்கைகள், முகவரி / மொபைல் எண்ணில் மாற்றங்கள் போன்ற வங்கி உங்களுக்குத் தெரியப்படுத்தும் தகவல்களை அவசியம் பார்த்து சரிதானா என்று உறுதி செய்துகொள்ளுங்கள், ஏதேனும் முரண்பாடுகள் தெரியவந்தால் உடனே வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள்.
- வங்கியிடம் பதிவு செய்து வைத்திருக்கும் உங்கள் முகவரி அல்லது மொபைல் எண் மாற்றப்படும் போது உடனே அவற்றை வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள்.
- உங்கள் தனிப்பட்ட அடையாள எண்ணை (பர்சனல் ஐடெண்டிஃபிகேஷன் நம்பர் - பின்) மனப்பாடம் செய்து வைத்திருக்க வேண்டும், வழக்கமான இடைவெளிகளில் அவற்றை மாற்ற வேண்டும், இந்த நம்பரை மற்றவர்கள் பார்க்கும் படி எங்கேயும் எழுதி வைக்கக் கூடாது
- கடைகளில் கிரெடிட் /டெபிட் கார்டைப் பயன்படுத்திய பிறகு அது உங்களிடம் திரும்ப வந்து சேரும் போது அது உங்கள் கார்டு தானா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
- கடையில் உங்கள் கண் பார்வையில் கிரெடிட் /டெபிட் கார்டு ஸ்வைப் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்
- கார்டு பயன்படுத்தியவுடன் கணக்கில் பற்று வைக்கப்படும் தொகை குறித்த தகவல் செய்தியை அவசியம் சரிபார்க்க வேண்டும்
- பிஓஎஸ் மெஷின்கள் மற்றும் ஏடிஎம் மெஷின்களில் நீங்கள் உங்கள் பின் நம்பரை எழுதும் போது மற்றவர்கள் பார்க்க இயலாதவாறு மறைவாக எழுத வேண்டும்
- ஒருவேளை உங்கள் கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு தொலைந்து போய்விட்டால் அல்லது அதன் விவரங்களை நீங்கள் தவறுதலாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தால், வங்கியிடம் அதை உடனே தெரிவித்துவிட வேண்டும்
- வங்கியின் வாடிக்கையாளர் தொடர்பு தொலைபேசி எண்ணை கைவசம் தயாராக வைத்திருக்க வேண்டும், கணக்கில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் / வங்கி உதவி தேவைப்படும் காலத்தில் / அவசர உதவி தேவைப்படும் போது / கார்டுகள் தொலைந்து போய்விடும் சமயங்களில் வங்கியுடன் விரைந்து தொடர்பு கொள்ள இது பேருதவியாக இருக்கும்
- போலி செய்திகள் / அழைப்புகள் / மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும் போது அவைகளை நீங்கள் பதிலளிக்காமல் ஒதுக்கிவிட வேண்டும், உங்கள் சொந்த விவரங்கள் எதையும் பகிர்ந்துகொள்ளக் கூடாது
- உங்கள் கிரெடிட் / டெபிட் கார்டுகளை வேறு யாரிடமும், இண்டஸ்இண்ட் பேங்க் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டாலும் கூட, கொடுக்கக் கூடாது.
- உங்கள் பின்/ ஓடிபி/ சிவிவி/ விபிவி/ மாஸ்டர் செக்யூர் பாஸ்வெர்ட்ஸ் விவரங்களை வேறொருவரிடம் ஒருபோதும் தெரிவிக்கக் கூடாது. வங்கி அல்லது அரசு நிறுவனங்கள் எதுவும் இதை உங்களிடம் கேட்காது.
- உங்கள் கார்டு / கணக்கு விவரங்களைப் பாதுகாப்பில்லாத வைஃபை நெட்வொர்க்குகளில் அணுகக் கூடாது, இந்த நெட்வொர்க்குகளிலிருந்து ஆன்லைன் ஷாப்பிங் எதையும் பொது இடங்களிலிருந்து செய்யக் கூடாது.
- ஏடிஎம் இடங்களில் அறிமுகம் இல்லாத ஒருவரிடமிருந்து உதவி எதையும் கேட்கக் கூடாது, அவர்கள் உதவ தானாக முன்வந்தாலும் கூட நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.